மதுராந்தகம் அருகே தொழிற்சாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்து விழுந்ததால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமத்தில் இயங்கி வரும் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பார்க் இண்டஸ்ட்ரியல் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர் களுக்கு இந்த தொழிற்சாலையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என கூறி நேற்று தொழிற்சங்கம் சார்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் எதிரே மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 24 பெண்கள் 30 ஆண்கள் கலந்து கொண்டனர்
இன்று இந்த தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்த பொழுது தொழிலாளர்களை பணிக்கு செல்ல விடாமல் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் கேட்டை பூட்டி கொண்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர் இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு காலை 9 மணி முதல் இருந்தே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஐந்து பெண் தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்த நிலையில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்
இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் வட்டாட்சியர் துரைபாபு மற்றும் குறுவட்ட ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து தொழிலாளர்களிடமும் தொழிற்சாலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி வேலையை விட்டு நிறுத்தியவர்களை மீண்டும் வேலைக்கு அனுமதித்தனர். அப்போது மதுராந்தகம் வட்டாட்சியர் அவர்கள் கூறியதாவது மதுராந்தகம் கோட்டாட்சியர் அவர்களிடம் உங்களது கோரிக்கையினை எடுத்துரைத்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் உங்களது கோரிக்கைகளை தேர்வு காண்கிறோம் என்று உத்தரவாதம் அளித்த பிறகு தொழிலாளர்கள் வேலை செய்ய உள்ளே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
[5:47 pm, 9/8/2024] +91 99402 07902: மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய பொது தொழிலாளர் ஒருங்கிணைப்பு மாநில பொதுச் செயலாளர் ஆர். வெங்கடேசன் தலைமை தா ங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர் டி. மோகன் மற்றும் பார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சங்க கிளைச் செயலாளர் சம்மன்சு மற்றும் தலைவர் தேன்மொழி மற்றும் கிளை சங்க உறுப்பினர்கள் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்