இராமநாதபுரம் ஜூன் 28-
சாக்கடை கழிவுநீர் குழாய் பதித்த ஊழியர்கள். இயந்திரங்களை மாடக்கொட்டான் கிராம மக்கள் சிறைபிடித்து, தர்ணாவில் ஈடுபட்ட னர்.
ராமநாதபுரம் நகராட்சியில் 2013-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் அமலுக்கு வந்தது. இங்கிருந்து கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு 6 கி.மீ. தூரத்தில் உள்ள மாடக்கொட்டான் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பழுதடைந்த குழாய் களுக்கு பதிலாக புதிய குழாய்கள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நகராட்சி பகுதியிலிருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு
நிலையம் வரை புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாடக்கொட்டான், ரமலான் நகர் பகுதியில் குழாய் பதிக்கச் சென்ற ஊழியர்கள், இயந்திரங்களை அப்பகுதியினர் சிறைபிடித்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி தலைவர் கார்மேகம், நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ஏற்கெனவே கூறியபடி நகராட்சி நிர்வாகம் நடந்து கொள்ள வில்லை. கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். அதுவரை புதிய குழாய் பதிக்கக் கூடாது எனக் கூறினர். நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து
சென்றனர். இதுகுறித்து போராட்டத்தில்
ஈடுபட்ட பொதுமக்கள் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீரை சுத்திகரித்து வெளி பேற்றாமல், அப்படியே கழிவுநீரை வெளியேற்றுவதால் இப்பகுதி நிலங்கள், தரவைக்காடுகள், ஆற்றில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீரும் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்பகுதியில் தொடர்ந்து தொற்று நோய் பரவி வருகிறது. கழிவுநீர் கலந்த தண்ணீரை குடித்து இங்குள்ள பசுமாடுகள் பல இறந்துள்ளன. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, முறைப்படி கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.