ஈரோடு. நவ.30-
ஈரோடு அருகே நசியனூ ரில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண் பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மண்பாண்ட தொழிலாளர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் எம் சி வெங்கடாசலம் கூறியதாவது
ஈரோடு நசிய னூர் பகுதியில் நான் உள்பட எனது குடும்பத்தினர் அனைவரும் மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம்.
இப்போது கார்த்திகை தீபம் வருவதை யொட்டி கார்த்திகை தீபம் விளக்குகள் தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்
பல்வேறு வடிவங்களில் 7 அகல் விளக்குகள் தயாரிக்கப் பட்டு விற்பனை செய்து வருகிறோம். இதில் புதிதாக 3 லிட்டர் எண்ணை ஊற்றி தீபம் ஏற்றும் பெரிய சைஸ் விளக்குகளும் விற்ப • னைக்கு வைக்கப்பட்டுள் ளது ஒரு ரூபாய் முதல் 300 ரூபாய் வரை உள்ள விளக்குகளும் இங்கு விற்பனைக்கு வைக் கப் பட் டுள்ளன. கோவில் மற்றும் தொழிற்சா லைகளில் பயன்படுத்துவ தற்கு இந்த பெரிய சைஸ் அகல் விளக்குகளை பொது மக்கள் வாங்கி செல்கின்றனர். வீடு களில் அன்றாடம் பயன் படுத்துவதற்கு சிறிய அளவி லும் அகல் விளக்குகள் தயார்
செய்து விற்பனை செய்து வருகிறோம்.
சில்லறை விற்பனை மட்டும் அல்லாமல் மொத்தமாகவும் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.
தற்போது அகல் விளக்கு தயாரிக்கும் பணி சிறிய அளவிலான மிஷின் மூலம் நடைபெறுகிறது. விவசாயம் மற்றும் நெசவாளர்களுக்கு இலவச மின் சாரம் வழங்குவது போல மண்பாண்ட தொழி லிலும் தற்போது மிஷின்கள் பயன்படுத்துவதால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்த போது மழை கால நிவாரணமாக ரூ 4 ஆயிரம் வழங்கினார் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக இருந்த போது ரூ 5 ஆயிரமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 12, 500 பேர் பயன் பெற்றனர். ஆனால் இப்போது 7500 பேருக்கு மட்டுமே வழங்கப் படுகிறது.மகளிர் உதவி தொகை வழங்குபவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது நிறுத்த ப்பட்டு உள்ளது. மகளிர் உதவி தொகை என்பது பொதுவானது. எனவே பாகுபாடு இல்லாமல் மண்பாண்ட நல வாரியத்தில் பதிவு செய்து உள்ள அனைவருக்கும் மழை கால நிவாரண உதவி வழங்க வேண்டும்.
மேலும்
மாவட் டத்தில் அனைத்து இடங்களி லும் களிமண் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும்.
இவ் வாறு அவர் கூறினார்.