பூதப்பாண்டி – நவம்பர் – 11-
குமரி மாவட்டம் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் பூதப்பாண்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருக்கிறதா என சோதனை செய்தார்கள் அதில் பெருந்தலை காடு பகுதியில் சசிகலா (57) என்பவர் நடத்தி வரும் பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை 13 பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது உடனே போலீசார் அவைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.