பூதப்பாண்டி – டிசம்பர்-07-
பேச்சிப்பாறையை அடுத்துள்ள மனியன் குழி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை இவரது மகள் சிந்துகுமாரி (42) இவர் சற்று மன நலம் பாதிப்படைந்துள்ளார் எனவே இவரது பெற்றோர்கள் இவரை தடிக்காரன் கோணத்தை அடுத்துள்ள கொத்தலம் பள்ளம் பகுதியிலுள்ள ஒரு பெண்கள் நல காப்பகத்தில் சேர்த்துள்ளார்கள் சுமார் எட்டு வருடங்களாக இவர் அந்த காப்பகத்தில் தங்கி வந்துள்ளார் நேற்று முன்தினம் இரவு கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த (ஹர் பிக்) லோசனை எடுத்து தெரியாமல் குடித்து விட்டதாகவும் அதனால் அவரை ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்துள்ளார் இது குறித்து சிந்துகுமாரியின் தம்பி மணி கன்டன் (32) கீரிப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.