கொல்லங்கோடு, ஜன- 14
கொல்லங்கோடு அருகே துண்டுவிளைப் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மனைவி கலா (42). பக்கத்து ஊரான போராங்காடு பகுதியை சேர்ந்த ஷைஜு ( 37) என்ற ஜேசிபி ஓட்டுநருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அவரது தங்கை திருமணத்திற்காக கலாவிடம் 7 பவுன் நகையை அடகு வைக்க கொடுத்து உள்ளார். நகையை பின்னர் நகையை பலமுறை திருப்பி கேட்டும் ஷைஜு கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி மாலை ஷை ஜூ வீட்டுக்கு சென்று நகையை கலா கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷைஜூ தகாத வார்த்தைகள் பேசி கலாவை தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பல்வேறு இடங்களில் கலாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.உடனே அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஷைஜூ மீது வழக்கு பதிவு செய்தனர்.