சுசீந்திரம் நவ 5
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் வயது 49 ஆட்டோ டிரைவர் இவர் நேற்று முன்தினம் மதியம் என். ஜி. ஓ. காலனி சந்திப்பு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் உள்பட 3 பேர் அங்கு வந்துள்ளனர்.
அவர்கள் நாகராஜனிடம் தங்கள் வசம் அழகிய பெண்கள் இருப்பதாகவும் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம். அதற்கு ரூ. 2500 கொடுத்தால் போதும் என்றும் ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி விபச்சாரத்திற்கு அழைத்தார்களாம். இது குறித்து நாகராஜன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையில் போலீசார் சம்பவ இடமான என். ஜி. ஓ. காலனி ராதாகிருஷ்ணன் நகரில் பெண் புரோக்கர் ராஜம் குடியிருக்கும் வீட்டிற்கு விரைந்து சென்றனர் அங்கு அரைகுறை ஆடைகளுடன் இருந்த 3 பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் ஆந்திரா, சேலம் மற்றும் நாகர்கோவில் முதலியார்விளை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக புரோக்கர்கள் கன்னியாகுமரி ராஜம் வயது 62, பெபின்மரியதாஸ் ராஜ் வயது 34, புவியூர் அருண் வயது 25 ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான ராஜம் நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் மற்ற 2 பேரும் நாகர்கோவில் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.