நாகர்கோவில் ஜூலை 25
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் செக்காரவிளைப் பகுதியை சேர்ந்த 72 வயதான ஜோசப் அருள்ராஜ் என்பவர் மனைவி வசந்தாம் தனது கணவர் அவருடைய தம்பி வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது அவரை கொலை செய்யும் நோக்கில் தாக்கிய நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும். இதுவரை நடவடிக்கை எடுக்காத இரணியல் காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க கேட்டு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் சொக்கார விளையில் என்னுடைய குடும்பத்தின ரோடு வசித்து வருகிறோம். என் குடும்பத்தினருக்கும் எனது கணவரை அடித்த குடும்பத்தாருக்கும் முன் விரோதம் உண்டு அந்த முன் விரோதத்தின் அடிப்படையில்
எனது கணவர் குடும்பத்தாரை கடந்த சில மாதங்களாக துன்புறுத்தி வருகின்றார்கள்.
இந்நிலையில் கடந்த 20.06.2024 தேதியன்று காலை 9.00 மணிக்கு எங்கள் ஊரில் உள்ள எனது கணவர் தம்பி மகன் ஆல்வின் சேவியர் வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தபோது மூன்று பேர் கும்பல் ஆல்வின் சேவியர் வீட்டின் முன்பு ரோட்டில் வைத்து கம்பி மற்றும் கம்புகளை வைத்துக்கொண்டு எனது கணவரை போகவிடாமல் தடுத்து நிறுத்தி இன்று உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று கருங்கல்லால் தலையில் அடித்து வீக்க காயம் ஏற்படுத்தி அருகிலிருந்து சி சி டிவி கேமராவை கம்பால் அடித்து உடைத்து சேதப்படுத்தியும் கம்பியால் நெஞ்சில் குத்தி உட்காயம் ஏற்படுத்தினார்கள் , இதனால் எனது கணவர் அய்யோ என்று சத்தம் போட்டுக் கொண்டு அவ்விடத்தில் இருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தை அருகிலிருந்த பலர் பார்த்தார்கள் அவர்கள் உடைத்து சேதப்படுத்திய சிசிடிவி- கேமராவின் மதிப்பு ரூ 5000/- ஆகும்.
அவர்கள் தாக்கியதில் எனது கணவர் உடம்பு முழுவதும் வேதனையுமாக வலியும் இருந்த காரணத்தினால் நான் அவரை அழைத்துக்கொண்டு குளச்சல் அரசு மருத்துவ மனையில் கொண்டு உள் நோயாளியாக 20.06.2024 சிகிட்சையில் சேர்த்தேன். இரணியல் போலீசார் 21.06.2024 தேதியன்று காலை மருத்துவமனைக்கு வந்து எனது கணவரிடம் புகார் பெற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக கூறிச் சென்றார்கள். இந்த நாள் வரை எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. மேலும் காவல் நிலையத்தில் மனு ரசீது போட்டுள்ளதாக சொல்கிறார்கள். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி பதிவு பென் டிரைவும் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன் . எனது கணவர் 20.06.2024 தேதி முதல் 25.06.2024 தேதி வரை மருத்துவமனையில் உள் நோயாளியாக மருத்துவ சிகிட்சை பெற்றார் . தற்பொழுது அவரது உடம்பு முழுவதும் வலியும் வேதனையுமாக உள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் நான் கடுமையான மன உளைச்சலில் உள்ளேன். இதுசம்மந்தமாக நானும் எனது கணவரும் தங்களிடம் நேரில் ஆஜராகி புகார்மனு அளித்திருந்தோம் . புகார் மனு மீது இதுவரை இரணியல் போலீசார் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எனது கணவரை தாக்கிய கும்பல் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க இரணியல் காவல்துறைக்கு உத்தரவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.