திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினார்
திருப்பத்தூர்:பிப்:08, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வலியுறுத்தியும், ஆலங்காயம் பகுதியில் செயல்பட்டு ஜெயவாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பங்குதாரர்களின் சாதிய வன்கொடுமை செயலை கண்டித்தும், நெக்குந்தியில் அம்பேத்கரின் உருவ படத்தினை சேதப்படுத்திய சம்பவம் குறித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு நகர மன்ற உறுப்பினர் , மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான் தலைமை வகித்தார்.
திருப்பத்தூர் தொகுதி செயலாளர் அருணாச்சலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மண்டல துணை செயலாளர் கோவேந்தன்,
மாவட்ட செயலாளர் (வடக்கு) ஓம்பிரகாசம், மாவட்ட துணை செயலாளர் கலா சண்முகம், பாராளுமன்ற தொகுதி செயலாளர் முருகேசன், திருப்பத்தூர் நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர் இர.பாஸ்கரன், கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் ஓவியர் அண்ணாமலை, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எ.ஜெ.சக்தி , ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் குபேந்திரன், ஆம்பூர் நகர செயலாளர் சக்தி,மாதனூர் ஒன்றிய செயலாளர் சரவணன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் வின்சென்ட்,மாவட்ட செய்தி தொடர்பாளர் பார்த்திபன்,மாவட்ட ஓவியர் அணி அமைப்பாளர் பாலா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மண்டல செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்தனர்.
மாநில துணைப் பொதுச் செயலாளர் கண்டன உரை ஆற்றுகையில்:
தமிழ்நாடு முழுவதும் சாதி தீண்டாமைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகிறது. வேங்கை வயல் சம்பவத்தை பொருத்த வரை யார் பாதிக்கப்ட்டுள்ளார்களோ அவர்கள் மீதே வழக்கை பதியும் போக்கு உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விசாரணைக்கு வந்தாலும் எந்த பலனும் இல்லை. இந்த சம்பவத்தின் உண்மை நிலையினை கண்டறிவதற்கு தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வந்தாலும் செவி சாய்க்கவில்லை. விசாரணையின் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததில், வேங்கை வயல் பகுதியில் முருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரனை செய்யவில்லை. தொடர்ந்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் காவல்துறை விடுதலை சிறுத்தைகள் கட்சியினை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அஇஅதிமுக, பாஜக கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை. இந்த சம்பவம் மனித குலத்திற்கே பெரும் அவமானத்தை காட்டுகிறது.தலித் மக்கள் பெரும் கோபத்தோடு இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் தெளிவாக உள்ளார். வேங்கை வயல் நீதி கிடைக்கும் வரை போராடுவோம். திமுக அரசிற்கு எதிராக பாஜக செயல்படுகிறது. நாம் தமிழர் சீமான் மறைமுக பாஜக கூட்டணியினை செய்து வருகிறார். தலித்துகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.பாரதிய ஜனதா கட்சியினை சேர்ந்தவர்கள் வெற்று சாயம் பூசிக்கொண்டு தலித் மக்களுக்கு நல்லது செய்வது போல பொய் வேசம் போடுகிறார்கள். சாதிய ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் கட்சிகள் பாஜக,பாமக, நாம் தமிழர் கட்சி. ஆர் எஸ் எஸ் சங்பரிவார் கட்சியாக நாம் தமிழர் கட்சி மாறிவிட்டது. தந்தை பெரியாரை குறி வைத்து பேசும் சீமான், அயோத்திதாச பண்டிதர் கணக்கெடுப்பின்போது யாரும் இந்து என்று பதிவிடாதீர்கள் என்று சொன்னவர். தந்தை பெரியாருக்கு முன்பே திராவிடத்தை பேசியவர்கள் ஆதிதிராவிடர்கள். சாதி வெறியோடு செயல்படும் வேலையை செய்து வருபவர் சீமான். வேங்கை வயல் பிரச்சினையை பேசாதது ஏன்? தலித் விரோத கட்சியாக நாதக,பாமக செயல்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் நடைப்பெற்ற சம்பவத்தை அரசியலாக்குகிறது பாஜக. வண்முறையை உருவாக்கும் கட்சியில் இருந்து வரும் வந்தேறி எச்.ராஜா என்று வண்மையாக கண்டித்து பேசினார்.
இந்த கண்டன நிகழ்ச்சியினை ஒன்றிய பொருளாளர்கள் சங்கர்,சரவணன், திருப்பத்தூர் நகர அமைப்பாளர் விக்கி, ஒன்றிய அமைப்பாளர் திருமாவிமல், கந்திலி ஒன்றிய அமைப்பாளர் இரா. விக்கி, ஒன்றிய துணை செயலாளர் சிறுத்தை மணி, ஒன்றிய துணை செயலாளர் கோதண்டன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைப்பெற்றது.
கண்டன நிகழ்ச்சியின் இறுதியில் இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் கோகுல் அமர்நாத் நன்றியுரை வழங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.