தஞ்சாவூர் மே.17
குப்பை கழிவுகள் நிறைந்த மாசடைந்து காணப்பட்ட கல்லணை கால்வாய் தூய்மைப்படுத்துவதற்காக தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி பணிகளை தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர் மாநகரம் வழியாக கல்லணை கால்வாய் ஆறு ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதிக்கு சென்று பாசனத்திற்கு பயன்பெற்று வருகிறது.
இந்த ஆற்றின் பல்வேறு இடங்களில் இருந்த கழிவுப் பொருள்களை குப்பையை தொட்டியாக ஆற்றை பயன்படுத்தியதால் துர்நாற்றம் வீசி வருகிறது .இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன் இந்த ஆற்றின் தண்ணீர் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் படி தூய்மை பணியாளர் களையும் ஈடுபடுத்தி கல்லணை கால்வாய் ஆற்றை தூய்மைப்படுத் த முடிவு செய்யப்பட்டது
இதன்படி சிவாஜி நகரில் தொட ங்கி இருபது கண் பாலம் வரை 690 தூய்மை பணியாளர்கள், பொக்லைன்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மூலம் ஆற்றில் கிடந்த பிளாஸ்டிக் பைகள், துணிகள், பாட்டில் கள் ,தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் அகற்றும் நடந்தது. இப்பணியில் துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 4 குழுவாக பிரிக்கப்பட்டு,
மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி முன்னிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த 4 குழுக்களும், சீனிவாசபுரம், சிவாஜி நகர், மேம்பாலம் முதல் பெரிய கோவில் வரையிலும் அங்கிருந்து எம்.கே.மூப்பனார் சாலை வரையிலும்அங்கிருந்து நாகை சாலை உள்ள மேம்பாலம் வரையிலும், அங்கிருந்து 20 கண் பாலம் வரையிலும் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றினர். இந்தப் பணியின் மூலம் கல்லணை கால்வாயில் கொட்டப்பட்டிருந்த 22 டன் எடை கொண்ட குப்பைகளை அகற்றப்பட்டன. இதன் மூலம் கல்லணைக்கால் வாய் ஆற்று பகுதி தூய்மை பெற்று பாசனத்திற்கு தயார்நிலையில் இருக்கும் என மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சுபாஸ் காந்தி தெரிவித்தார்.
தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது!!
Leave a comment