மதுரை.
ஏப். 09
மதுரை காந்தி மியூசியம் அருகே மாநகராட்சி சார்பில் நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. இதனை தமிழ்நாடு நீச்சல்பயிற்சி சங்கத்தினர் முறையாக பராமரித்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த காலம் இன்னும் கலாவதி ஆகாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் வேறு ஒரு நபருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக கூறி தற்போது நீச்சல் குளத்தை பராமரித்து வருவோரை வெளியேற உத்தரவிட்டு அறிவிப்பு நோட்டீஸ் மாநகராட்சி அதிகாரிகளால் ஒட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நீச்சல் பயிற்சி சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மற்றும் மதுரை மாவட்ட தலைவர் ஸ்டாலின்.
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் கடந்த 2021- ஆம் ஆண்டுக்கு முன்பு எந்த வித பராமரிப்பின்றி, அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பறை
வசதிகளின்றி,
நீச்சல் பயிற்சிக்கு வருவோருக்கு எவ்வித சுகாதார வசதியும் இல்லாத நிலையில் இருந்து வந்தது.
இதனை
தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் பயிலும் ஆர்வமுள்ள நபர்களுக்கு நீச்சல் குளத்தின் ஆழம் அதிகபட்சம் 12 அடியிலிருந்து ஆறு அடி மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில்
எங்களது தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின்
சார்பில் முறையான ஏலத்தின் அடிப்படையில்
சுமார் ரூ.60 இலட்சங்கள் மதிப்பீட்டில் செலவு செய்து முறையாக பராமரித்து வருகிறோம்.
குறிப்பாக, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின்
எந்தவித நிதி உதவியும் பெறாமல் முழுக்க முழுக்க எங்களது சங்கத்தின் சொந்த நிதியை வைத்து இன்று வரை பயன்படுத்தி சிறப்பாக பராமரித்து வருகிறோம். வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு நீச்சல் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்குவிக்கும் வகையில் சேவை அடிப்படையில் பயிற்சி அளித்து வருகிறோம்.
மேலும்
மாவட்ட அளவில் மாநில அளவில், தேசிய மற்றும் உலக அளவில் சிறந்த நீச்சல் வீரர்கள் உருவாக்கும் உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுத்தி வருகிறோம்.
இதன் பயனாக, இங்கு நீச்சல் பயிற்சி பெற்ற விகாஸ் என்ற நீச்சல் வீரர் இந்தியா சார்பில் ஆசியக் கோப்பையில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். என்பதே இங்கு நாங்கள் அளித்து வரும் நீச்சல் பயிற்சிக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.
இந்த நிலையில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென்று முன் அறிவிப்பின்றி இங்கு செயல்பட்டு வரும் நீச்சல் குளத்தை வேறு ஒருவருக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக கூறி நீச்சல் குளம் நுழைவு வாயில் முன்பு நோட்டீஸ் ஒட்டி சீல் வைத்துள்ளனர்.
தொடர்ந்து, மதுரை மாவட்ட நீச்சல் சங்கத்தின் கீழ் முறையாக பராமரித்து செயல்பட்டு வரும் இந்த நீச்சல் குளத்தை இரண்டு தினசரி நாளிதழில் ஏலம் குறித்த அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் கூறுகின்றனர். ஆனால் அந்த அறிவிப்பில் சைக்கிள், இருசக்கர வாகன காப்பகம், கட்டண கழிப்பறை போன்ற வற்றிற்கு மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதில் மாநகராட்சி நீச்சல் குளம் ஏலம் குறித்து எவ்வித அறிவிப்பும் அதில் குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் நாங்களும் ஏலத்தில் கலந்து கொண்டு நல்ல தொகைக்கு குத்தகைக்கு எடுத்திருப்போம்.
எனவே, வேண்டுமென்றே, திட்டமிட்டு
தற்போது வேறு நபர் ஒருவருக்கு நீச்சல் குளத்தை பராமரிக்க அனுமதி அளித்திருப்பதை உடனடியாக ரத்து செய்து மீண்டும் எங்களுக்கே வழங்க வேண்டும் என்று தமிழக அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறோம். என அவர் இவ்வாறு தெரிவித்தார்.