கடையநல்லூர் டிச 9
தென்காசி மாவட்டம் சுரண்டையில் 50 பேர் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியருக்கான யோகா போட்டியில் கடையநல்லூர் மாணவர்கள் பதக்கம் வென்று அசத்தல் .
தென்காசி மாவட்டம் சுரண்டையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் அமைப்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான யோகா போட்டி நடைபெற்றது இதில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அதில் கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ,ப்ரைட்டன் பள்ளி ,விஸ்டம் மேல்நிலைப்பள்ளி, திருநாவுக்கரசு துவக்கப்பள்ளி, உள்ளிட்ட பள்ளிகளின் சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் யோகா குறித்த பல்வேறு சாகசங்களை பள்ளி மாணவ மாணவிகள் செய்து காட்டிய நிலையில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்றுவரும் பாலஜெயந்தி என்ற மாணவி மற்றும் கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாதவன் என்ற மாணவனும் நிகழ்ச்சியில் அர்த்த மச்சேந்திராசனம் என்ற ஆசனத்தை போட்டி நடத்துபவர்கள் நிர்ணயத்த கால வரம்பிற்கும் கூடுதலாக செய்து காட்டி சாதனை படைத்தனர் இதற்காக அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சோழன் உலக சாதனை புத்தக நிறுவனரும் முதுநிலை ஆசிரியருமான நீலமேகம் நிமலன் என்பவர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பதக்கத்தையும் சான்றிதழ்களையும் வழங்கினார் . தமிழகத்தைப் பொறுத்த வரையில் தற்போதைய அரசு தமிழக பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு துறைக்கு என சிறப்பு உத்வேகம் அளித்ததோடு மட்டுமின்றி அதற்கான சிறப்பு நிதிகளையும் ஒதுக்கீடு செய்து தமிழக மாணவ மாணவிகளை உலக அளவில் விளையாட்டில் முன்னேறச் செய்து வருகிறது அந்த வகையில் தனியார் அமைப்புகளும் அரசோடு கைகோர்த்து பள்ளி மாணவ மாணவிகளை பல்வேறு விளையாட்டு துறைகளில் அங்கம் வகிக்க இது போன்ற போட்டிகளை நடத்தி பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி மென்மேலும் மாணவ மாணவிகளை ஊக்குவித்து வருகிறது அந்த வகையில் சுரண்டை தனியார் பள்ளியில் நடந்த கடையநல்லூர் பள்ளி மாணவர்கள் யோகா சாகச போட்டியில் கடையநல்லூர் பள்ளி மாணவர்கள் வென்றது உள்ளபடியே பெற்றோர்கள் மட்டுமின்றி கடையநல்லூர்க்கும் பெருமை சேர்த்ததை நினைத்து பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.