[2:22 pm, 8/1/2025] +91 96777 06646: ஊட்டி. ஜன.09.
தேசிய அளவிலான திறன் அறிவு விக்சித் பாரத் போட்டிக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து பழங்குடி மாணவி தேசிய அளவில் தேர்வாகி மூன்றாம் இடத்தை பிடித்த தமிழகத்திற்கும், குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கீழ் கோத்தகிரி தேனாடு அருகே உள்ள கீழ்கட்டபெட்டு ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மாணவி பார்த்தசாரதி இவர் இருளர் பழங்குடி சமூகத்தை சார்ந்தவராவார். இவர் அதே பகுதியில் உள்ள கீழ்கோத்தகிரி அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார் இவர் மத்திய அரசு நடத்திய விக்சித் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு இச்சாதனையை பெற்றுள்ளார்.
பள்ளியில் படிக்கும் போது பொது அறிவும், அசாத்திய திறமையை பலவும் பெற்றவர். இப்பள்ளியில் உள்ள முன்னாள் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் என்பவர் கொடுத்த ஊக்கத்தின் பெயரில் இப் போட்டிக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் விக்சித் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கட்டுரை வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார். பின்னர் சென்னையில் நடந்த மாநில அளவிலான இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றார்.
[2:22 pm, 8/1/2025] +91 96777 06646: இதனால் மாநில அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றதால் தேசிய அளவில் தமிழகத்திலிருந்து மூன்றாவது இடத்தை பிடித்தார் என்பது சிறப்புகுரியது தேசிய அளவில் நடந்த போட்டியில் பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 44 பேர் கொண்ட குழுவினர் டெல்லி சென்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில அளவில் சாதனை படைத்தமைக்கு பாராட்டு சான்று மற்றும் சாதனை விருதினையும் பெறுகின்றார். 2024 – 2025 கல்வி ஆண்டுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து மாணவி பார்த்தசாரதி கீழ் கோத்தகிரி பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் தன்னார்வலராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வி கணக்கெடுப்புக்காக ஹரி உத்தம் சிங் மற்றும் முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் நஞ்சுண்டன் ஆகியோர் சென்ற குழுவினர் இந்தப் பகுதிக்கு கணக்கெடுக்க சென்ற போது கல்வி அறிவில் மிகவும் பின்தங்கியுள்ள தனது இருளர் சமூக குழந்தைகளுக்கு வட்டார புதிய பாரத எழுத்தறிவு திட்ட மூலம் படிப்பறிவை சொல்லிக் கொடுத்தார் என்பது பாராட்டுக்குரிய விஷயமாகும். விக்சித் பாரத் போட்டியில் தேசிய அளவில் தேர்வாகி மூன்றாவது இடம் பிடித்த பழங்குடி மாணவி பார்த்தசாரதிக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இம்மானவி சாதனைக்கு காரணமாக இருந்த கீழ் கோத்தகிரி அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஆசிரியர்கள், மாவட்ட , வட்டார கல்வி அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் மாணவி பார்த்தசாரதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தேசிய அளவில் சாதனை படைத்த மாணவி பார்த்தசாரதி தனது பெற்றோர்களுடன் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் விருதினை பெறுவதற்காக டெல்லி சென்று உள்ளனர் என்பது ககுறிப்பிடத்தக்கது.