மதுரை ஜனவரி 23,
மதுரை ஆனையூரில் உள்ள ஐஸ்வர்யம் மஹாலில் அனைத்து கட்டடப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) உள்ளிட்ட நிர்வாக குழு மட்டும் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 2024-25 க்கான மாநிலத்தேர்தல் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது, இந்த மாநில தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 85
கட்டடப் பொறியாளர்கள் சங்கங்கள் இணைந்து மாநில தேர்தலில் கலந்து கொண்டனர். தேர்தலில் மாநில தலைவராக விஜய பானு ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் துணைத் தலைவர் பிரபு, மாநிலச் செயலாளர் பாஸ்கரன், மாநில பொருளாளர் அசோகன், மாநில இணைச் செயலாளர் கலியமூர்த்தி ஆகியோரை புதிய மாநில நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் தலைமை தேர்தல் அலுவலராக வெற்றி குமரன் தேர்தலை சிறப்பாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.