நாகர்கோவில் – டிச. 12,
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பனிஷ் என்பவருக்கு சொந்தமான பரலோகமாதா விசைப்படகில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு குளச்சலில் இருந்து பனிஷ் உட்பட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று அதிகாலை ஆழ்கடலில் அவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்த போது அவ்வழியாக வந்த சரக்கு கப்பல் மோதியதில் மீனவர்கள் சென்ற படகு ஆழ்கடலில் மூழ்கியது கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்கள் ஒன்பது பேரையும் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குளச்சலை சேர்ந்த ரோமன் என்ற விசைப்படகானது அவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.