தென்காசி மாவட்டம் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.94 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார் , இணை இயக்குநர் (இந்து சமய அறநிலையத்துறை)அன்புமணி, தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர்,குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் நாகேஸ்வரி, குற்றாலம் பேரூராட்சி 6-வது வார்டு உறுப்பினர் டி.ஆர்.கிருஷ்ணராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.