திருப்பூர்:ஜூலை 26 தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலமுருகன், ஸ்டாலின், பிரபு,இளங்கோவன், மற்றும் மீன்வள ஆய்வாளர் ரெஜினா ஜாஸ்மின் ஆகியோர் அடங்கிய குழுவினரால் மேற்படி மீன் மார்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மீன் விற்பனை செய்யும் கடைகளுக்கு கீழ்க்கண்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. மீன்கள் விற்பனை செய்யப்படும் இடம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்.
விற்பனைக்கு, இருப்பு வைக்கப்படும் மீன்கள் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும்.
விற்பனைக்கு வைக்கப்படும் மீன்கள் முதலில் வருபவை முதலில் விற்பனை (first in – first out) என்ற முறையில் வைக்கப்பட வேண்டும்.
மீன் விற்பனை செய்பவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும்.
உணவு பாதுகாப்பு துறை உரிமம் கடைகளில் காட்சி படுத்தப்பட வேண்டும்.
கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்யக்கூடாது.
மீன் கொள்முதல் செய்யப்படும் பில்களை முறையாக பராமரிக்க பட வேண்டும்.
மீன்கள் இருப்பு வைக்கப்பட பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகள் சுகாதார
மான முறையில் தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும். மீன்களை குளிர்வதன பெட்டியில் வைத்து அடுக்கும் பொழுது மீன்களுக்கு மேலும் கீழும் ஆக நல்ல முறையில் உள்ள ஐஸ் கட்டிகளை சரியாக அடுக்கி வைக்க வேண்டும். மீன் வாங்கும் பொதுமக்கள் கீழ்க்கண்டவாறு பார்த்து வாங்க அறிவுறுத்தப்பட்டது.
மீன்களின் கண்கள் பிரகாசமாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும்.
மீன்களின் செதில்கள் அடர் சிவப்பு கலரில் இருப்பதை பார்த்து வாங்க வேண்டும்.
மீன்களின் மையப்பகுதியில் லேசாக அழுத்தும் பொழுது அந்தப் பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். மீன்களின் மேல் பகுதி வழவழப்பு தன்மையுடன் உள்ளதா என்பதை என்பதை தெரிந்து வாங்க வேண்டும். மேலும் மாவட்ட நியமன அலுவலர் அவர்கள் கூறுகையில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் வாங்கும் உணவுப் பொருள்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு 94440 42322 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.