குண்டும் குழியுமாக சாலை உள்ளதால் பொதுமக்கள் அவதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.நெடுங்குளம், புதுக்கி ராமம், தலைவன் நாயக் கன்பட்டி, திருசிலுவையாபுரம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்ற னர். கமுதியிலிருந்து இந்த கிராமங்களுக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளுக்குமுன்பு அமைக்கப்பட்டது. முறையான பராமரிப் பின்றி ரோட்டில் ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதமடைந்துள் ளது. மழைக் காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் இவ்வழியே செல்வதற்கு கிராம மக்கள் அச்சப்படு கின்றனர்.
கே.நெடுங்குளம் பொதுமக்கள் கூறியதா வது: கமுதியில் இருந்து கே.நெடுங்குளம், திருசி லுவையாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் செல்லும் முக்கியமான ரோடு சேதமடைந்து நடப்பதற்கே லாயக்கற்றதாக மாறி உள்ளது. அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சிரமப்ப டுகின்றனர்.
குறிப்பிட்ட நேரத் தில் பள்ளி, கல்லுாரிக்கு மாணவர்கள் செல்ல முடி யவில்லை. டூவீலரில் செல்பவர்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர் வெற்றி பெற்ற பின் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற. செவி சாய்க்கவில்லை.
எனவே மாவட்டஅதிகாரிகள் ஆய்வு செய்து புதிய ரோடு அமைத்துதர வேண் டும் என்று இந்தபகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.