திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவியர்கள் குவிந்து வருகின்றனர். கல்லூரியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களின் சீரிய முயற்சியால் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சி பகுதியில் கூட்டுறவுத்துறை சார்பாக ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வந்தார். இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயன்பெற்றனர். கூட்டுறவுதுறை சார்பாக சீவல்சரகு ஊராட்சியில் சுமார் 98கோடி மதிப்பில் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளின் கட்டிட கலை அமைப்புகளுடன் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டிட பணிகளை துவக்கி வைத்து பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. தற்போது ஆத்தூர் – கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ. காந்திநாதன் அறிவுறுத்தலின்படி 2024-2025ம் கல்வியாண்டிற்கு மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கல்லூரியில் மாணவ மாணவியர்கள் விண்ணப்ப படிவங்களை கல்லூரியின் நிர்வாக கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் இரா.கணேசன், மற்றும் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் ச.பழனிகுமார் ஆகியோர் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் இருந்து சேர்க்கைக்கான கோப்புகளை பெற்றனர் நிகழ்ச்சியின் போது அலுவலக கண்காணிப்பாளர் அருண்மொழி, உதவியாளர் வசந்தகுமார் இளநிலை உதவியாளர் பாக்கியலட்சுமி மற்றும் கல்லூரி துணைத்தலைவர்கள்,உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கல்லூரியில் சேரவரும் மாணவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கை குறித்து கல்லூரி துணை முதல்வர் ச.பழனிக்குமார் கூறுகையில் இந்த கல்வி ஆண்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் சேர்க்கைக்காக வந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் நமது கல்லூரியின் சிறப்பே ஒழுக்கம், படிப்பு,பாதுகாப்பு இக்கல்லூரியில் சேரும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு வருட கட்டணம் ரூ-1500 இருந்து ரூ-2000 வரையே.இதனால் கிராமப்புறங்களில் இருந்து உயர்கல்விக்காக வரும் மாணவர்களின் கல்வி செலவு குறைகிறது இதனால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர் மேலும் நமது கல்லூரிக்கு வருகை தரும் மாணவ மாணவிகளுக்கு ஒழுக்கம்,படிப்பு , பாதுகாப்பு, இதுவே எங்கள் குறிக்கோள் ஆத்தூர் தொகுதியில் மாணவ மாணவியர் நலன் கருதி தொடங்கப்பட்ட ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருடத்திற்கு சுமார் ஆயிரம் ஏழை மாணவர்கள் உயர்கல்வியில் உயரும் நிலைமை உருவாகியுள்ளது. விரைவில் புதிய கட்டிடத்தில் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட உள்ளது அதன் பின்பு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். மாணவர்களின் நலன் கருதி ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விடுதி வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது.