ஊட்டி. ஜன. 18.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் பாரம்பரிய பண்பாட்டு விழாவாக குன்றின் குரல்கள் என்ற அமைப்பு மூலம் கோத்தகிரி பகுதியில் பல கிராமங்களை ஒருங்கிணைத்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு பதினோராம் ஆண்டு பொங்கல் விழாவாக கோத்தகிரி குலுங்கும் அளவிற்கு பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது கோத்தகிரி சந்தை திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக மக்கள் இசை கிராமிய பாடகர் சித்தன் ஜெயமூர்த்தி கலை குழவினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். தவச்செல்வன் தலைமை வகித்தார். முன்னதாக சுரேஷ் கலா வரவேற்புரையாற்றினார். விழாவிற்கு மணிவண்ணன் மகேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து குன்றின் குரல்கள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். வழக்கறிஞர் முனிரத்தினம், மண்னரசன், விஜயன், குயிலரசன், பாலநந்தகுமார், சிவகுமார், சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். தமிழகம் முழுவதும் நடைபெறும் புகழ் பெற்ற கிராமிய கலை குழுக்களின் தமிழர்களின் வரலாற்றை நினைவு கூறும் பண்பாட்டு கலைகளான பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, குதிரை ஆட்டம், மாடு ஆட்டம், காவடி ஆட்டம், சிலம்பாட்டம், சாட்டை குச்சி ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், நெருப்பு ஆட்டம், கருப்புசாமி ஆட்டம், தெம்மாங்கு நாட்டுப்புற நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நீலகிரி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் உள்ள இளைஞர்கள் சிறுவர்கள் பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி பொங்கிட்டு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை சிறப்புகள் செய்த 12 நபர்களுக்கு 11.ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கி கெளரவித்தனர் நிகழ்வை அமைப்பை சார்ந்த கதிரேசன், சரவணன், பத்மநாபன், கனகராஜ், அருள்ராஜ், யோகலிங்கம், ஆறுமுகம், பெரியசாமி மற்றும் கிராம கலைகுழு பொருப்பாளர்கள் கிராம தலைவர்கள், மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.