தாம்பரம்,பிப்ரவரி,05-
செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் ஆண்டு தோன்றும் மாவட்ட சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான செங்கல்பட்டு மாவட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் வித்யாசாகர் கல்வி குழும தலைவர் திரு விக்காஷ் சுரானா அவர்களின் ஆதரவோடு பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் 8 தாலுகாவில் இருந்து சுமார் 400 செஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 9,13,17,மற்றும் 25 வயதுடைய வீரர்களுக்கு நடைபெற்ற போட்டிகள் முதல் நாள் 2 சுற்றுகள் 2 ஆம் நாள் 4 சுற்றுகள் என மொத்தம் 6 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன.
முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 20 இடங்களை பிடித்த ஆண்கள் மற்றும் முதல் 15 இடங்களை பிடித்த பெண்கள் என ஒவ்வொரு பிரிவிற்க்கும் என 160 பேர்களுக்கும், முதல் இடத்தை பிடித்த 8 பேர்களுக்கு மாவட்ட சாம்பியன்ஷிப் சுழல் கோப்பைகளையும் வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழக தலைவர் ராஜாராமன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி பொது மருத்துவ பிரிவு தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் அப்பன்ராஜ் , குழந்தைகள் நல பிரிவு தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் சிவகாம சுந்தரி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த போட்டிகளில் பங்கேற்ற அனைத்து பிரிவுகளை சார்ந்த முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் அடுத்து வரும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டிகான ஏற்பாடுகளை
செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க கழகத்தின் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.