திங்கள் சந்தை, நவ- 17
இரணியல் அருகே உள்ள கண்டன் விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயன் (44) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜாசிங் (32) இவருக்கு திருமணமாகவில்லை. இருவரும் நெருங்கிய நண்பர்கள். மது அருந்திய தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி இரவு சுமார் பத்து மணியளவில் ராஜா சிங் பைக் சாக்கப்சர் இரும்பு ராடு எடுத்து வந்து மது அருந்து கொண்டிருந்த ஜெயன் பின்தலையில் ஓங்கி அடித்ததில் ஜெயன் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜா சிங்கை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், மது அருந்திக் கொண்டிருக்கும் போது ராஜா சிங்கின் தாயாரை ஜெயன் அவதூறு பேசிய முன்விரோதத்தில் அவரை கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து நேற்று (16-ம் தேதி) ராஜா சிங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தி, போலீசார் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.