நாகர்கோவில் – ஜூலை – 22
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேற்று வனத்துறை அமைச்சர் வருவதாக கேள்விப்பட்டு பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த காணி இன மக்கள் அவரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாக :-
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3000 காணி இன மக்கள் குடும்பங்களாக வசித்து வருகிறோம் நாங்கள் ரப்பர் விவசாயம் செய்து வருகிறோம் இந்த ரப்பர் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி எங்களுக்கு கடந்த காலங்களில் 2019 இல் இருந்து வழங்காமல் இருக்கிறது அதை எங்களுக்கு வழங்க வேண்டும். அரசு அதிகாரிகள் ஆலோசித்து உடனடியாக அந்த ரப்பர் மரங்கள் எல்லாம் வெட்டி மரக்கன்றுகள் நடுவதற்கான அனுமதிகளை வழங்குங்கள் கால தாமதம் ஏற்படுத்த வேண்டாம். அதோடு கூட இந்த வனவிலங்குகள் தாக்கி இறந்த குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி அரசு தரப்பில் வழங்கப்பட்டு வந்தது அதில் பாம்பு கடித்தால் வேறு ஏதும் விஷ ஜந்துக்கள் கடித்து இறந்தாலோ அந்த இழப்பீடு அவர்களுக்கு வழங்க முடியாமல் இருந்தது எனவே இந்த அரசு ஆணையை திருத்தி பாம்பு கடித்தாலும் அதற்கு வழங்க வேண்டும். நகரப்பகுதிகளில் பிடிபடுகின்ற பாம்புகள் அனைத்துமே கொண்டு வந்து எங்களுடைய குடியிறுப்பு பகுதிகளின் அருகாமையில் கொண்டு வந்து விடுகின்றார்கள் அந்த விஷம் கூடின பாம்புகளை விடுவதால் அந்த பாம்பு கடி என்பது வனப்பகுதியில் வைத்து பாம்பு கடித்து இறந்தால் அதற்கு மட்டும் நிவாரணம் வழங்க கோரிக்கை பரிசீலிப்பதாக கூறி இருக்கிறார்கள். இந்த பகுதியில் அரசு ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது மறைந்த முதல்வர் காமராஜர் ஆட்சியில் இருக்கும் போது பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்க்காக வேண்டி எங்களுடைய குடியிறுப்பு அருகாமையில் சுற்றிலும் அரசு ரப்பர் தோட்டங்கள் அமைக்கப்பட்டு எங்களுக்கு அந்த பகுதியில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்பொழுது அந்த ரப்பர் மரங்கள் முதிர்ச்சியாக வெட்டி மாற்றப்படுகிறது. இதனால் அங்கு காட்டு யானை , கரடி, புலி போன்ற விலங்குகள் எல்லாம் எங்களுடைய குடியிறுப்பு பகுதியில் நாசம் பன்னுவதால். அங்கு வாழ முடியாத சூழல் இருக்கிறது எனவே அந்த குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் இருக்கிறதான பகுதிகளில் நீங்கள் உடனடியாக மறு ரப்பர் மரங்களை நடவு செய்ய வேண்டும், எங்களுடைய குடியிறுப்பு பகுதியை பாதுகாக்கப்பட வேண்டும் , எங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.