கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை கணக்கெடுப்பாளர்கள் விவரங்கள் சேகரிக்க வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பையனப்பள்ளி ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்ததாவது:
கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி 1919-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதுவரை 20 கால்நடை 5 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இறுதியாக 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 21 – வது கால்நடை கணக்கெடுப்புப்பணி இன்று (25.10.2024) தொடங்கப்பட்டு, 28.02.2025 வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நடைபெற உள்ளது. இந்தப்பணியினை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 177 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 35 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பின் போது கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் வளர்க்கப்படும் மாடு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, வளர்ப்பு நாய், குதிரை, கழுதை, பன்றி மற்றும் முயல் உள்ளடங்கிய 16 வகையான கால்நடைகளுடன், இம்முறை தெரு நாய்களின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை கணக்கெடுப்பாளர்கள்
விவரங்கள் சேகரிக்க வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, உரிய விவரங்களை
அளித்து கால்நடை கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெறவும், எதிர்காலத்தில்
கால்நடைகள் வளம் மற்றும் நலத்துடன் மனிதர்களுக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும்
திட்டமிடவும் நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் தேவையான தரவுகளை
அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ,
அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்.மரு .சி.இளங்கோவன், மாவட்ட கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் துணை இயக்குநர் மரு.ஜோ.பிரசன்னா, உதவி இயக்குநர்கள் மரு.அ.அருள்ராஜ், மரு.ஜ.மகேந்திரன் மரு.ஜோதிபாசு, கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.ஆ.தினேஷ், மரு.சி.சிவசங்கரி, மரு.வேலன், மரு.சுவாமிநாதன், மரு.ராஜி, மரு.கு.ஸ்ரீவித்யா, மரு.ரகுபதி, மரு.சரண்ராஜ், மரு.ராஜராஜன், மரு.வெங்கடசுப்ரமணியன், மரு.ராஜேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் .அமிர்ஜான், துறை சார்ந்த அலுவலர்கள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் கலந்து கொண்டனர்.