வேலூர் 02
தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளராக வேல் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தினர் இன்று அவர் வேலூருக்கு வருகை தந்த போது பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க கட்சி சால்வைகள் அணைந்தும் மலர்கள் தூவி கட்சிக்குடியை ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்பு சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிரீன் சர்க்கிள், அண்ணா சாலை வழியாக பேரணியாக சென்றவர்கள் தவெகவின் கொள்கை தலைவர்களான காமராஜர், அம்பேத்கர், பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகிய திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
வேலூர் மாநகரம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கொடிகளை கட்டிக் கொண்டு ஊர்வலத்தில் கட்சி ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.