மதுரை டிசம்பர் 28,
மதுரையில் பரமபத வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு
மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் இதன் உபகோயிலான மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயிலின் 1434ம் பசலி 2024 ம் ஆண்டு திருஅத்யயன உற்சவம் (பகல் பத்து, இரவு பத்து) வருகிற 2024 டிசம்பர் 31ந் தேதி தொடங்கி 2025 ஜனவரி 1ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வருகிற 2025 ஜனவரி 1 ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.15 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் நடைபெறும். அது சமயம் அருள்மிகு பெருமாள் பரமபதவாசல் வழியாக சொர்க்கவாசல் எழுந்தருளவார் என்பதை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.