தக்கலை, நவ- 17
தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியில் ஒரு பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவில் உள்ளது. நேற்று 16- ம் தேதி அதிகாலை அந்த கால்வாயில் ஆண் உடல் ஒன்று மிதந்து வந்துள்ளது. அதனை பார்த்தவர்கள் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று கால்வாய் வந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் அந்த வாலிபர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராகுல் (20 )என தெரிய வந்தது. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் கால்வாயில் பிணமாக மிதந்துள்ளார். அவர் எப்படி இறந்தார்?
அவரது மோட்டார் சைக்கிள் எங்கே? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.