ஈரோடு மே 11
ஈரோடு மாநகராட்சி சார்பில் புதிய கனி மார்க்கெட்டில் ஜவுளி சந்தை செயல்படுகிறது இங்குள்ள வளாகத்தில் புதிய ஜவுளிக்கடை நேற்று திறக்கப்பட்டது ஈரோடு கருங்கல் பாளையம் மக்கள் சேவை மையத்தை சேர்ந்த தி மு க பிரமுகர் செந்தில் குமார் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய ஜவுளி கடையை திறந்து வைத்தார். மாநகராட்சி கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில் முன்னிலை வகித்தார் இந்த ஜவுளி சந்தையில் உள்ள 292 கடைகளில், பெரும்பாலானவை ஏலம் விடப்பட்டதால், சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது