பூதப்பாண்டி – நவம்பர் – 12-
குமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூதப்பாண்டியில் செயல்பட்டு வருகிறது அந்த அலுவலக கட்டிடம் பழமை வாய்ந்த பழைய கட்டிடமானதால் அரசு அந்த கட்டிடத்தைஇடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு ரூபாய் ஐந்து கோடியே நாற்பது இலட்சம் நிதி ஒதுக்கீடும் செய்தது அதன் அடிப்படையில் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடமும் கட்டப்பட்டு அந்த பணிகள் நிறைவடைந்து. இன்று காலையில் தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ள நிலையில் நேற்று அந்த புதிய அலுவலக கட்டிடத்தில் பால் காய்ச்சும் நிகழ்ச்சி நடந்ததாகவும் அதை முதல்வர் திறக்க இருக்கும் கட்டிடத்தில் அதற்க்கு முன்பு எப்படி இந்த நிகழ்ச்சி நடத்தலாம் என்று அதிகாரிகளை கண்டித்தும் நிகழ்ச்சி அழைப்பிதழில் தோவாளை ஓன்றிய கவுன்சிலர்களின் பெயரையோ இந்த ஒன்றியத்திற்க்குட்பட்ட 16 ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயரையும் வைக்க வில்லை என்று கூறியும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிராங்கிளின், சதீஷ் , பால் மணி, நீலகண்ட ஜெகதீஷ், சுஜிதா சுப்பிரமணியன், கிருஷ்ணகுமாரி, கமலா, ராஜலெட்சுமி, தாணம்மாள், ரெஜினா மற்றும் கவுன்சிலர் பூத லிங்கம் பிள்ளை உள்ளிட்டோர் புதிய கட்டிட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள் சம்பவ இடத்திற்க்கு பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதில் ஒரு முடிவும் எட்டாத நிலையில் மீண்டும் அந்த இடத்திலேயே தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள் முதல்வர் திறப்பு விழா காணும் முன்பே இந்த கட்டிடம் திறந்து பால் காய்ச்சியதால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது