கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புலியூர் கிராமத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றம் நடத்துனரை சரமாரியாக தாக்குதல் நடத்திய கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புலியூர் அடுத்த கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (47). தருமபுரியிலிருந்து ஊத்தங்கரை வரை செல்லும் தனியார் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இதே பேருந்தில் ஆறுமுகம் (37) என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை தரும்புரியிலிருந்து ஊத்தங்கரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, புலியூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்புலியூர் கிராமத்தை சேர்ந்த பிரதாப் (31) என்ற இளைஞர் பேருந்து முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, புகைத்துக்கொண்டிருந்தார். அப்போது பயணிகள் பேருந்தினுள் ஏறி முடித்தவுடன், பேருந்தை இயக்க முற்பட்டபோது, முன்பு இரு சக்கர வாகனத்தை எடுக்கச்சொல்லி ஹாரன் அடித்துள்ளார். அதற்கு மதுபோதையில் இருந்த பிரதாப், தொடர்ந்து எதற்காக ஹாரன் அடிக்குறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஓட்டுனரை வசைபாடியுள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய ஓட்டுனர், காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறி இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட பிரதாப் பேருந்து சாவியை எடுத்துள்ளார். அப்போது பேருந்து சாவியை எடுக்க வேண்டாமென கூறிச்சென்ற நடத்துனர் ஆறுமுகத்தை கழுத்தை பிடித்து பேருந்தோடு சேர்ந்து நெருக்கியுள்ளார். இதனை கவனித்த ஓட்டுனர், பிரதாப்பை கீழே தள்ளியுள்ளார். பின்னர் அங்கிருந்த பொது மக்கள் சமாதானப்படுத்தி பேருந்தை அனுப்பி வைத்துள்ளனர்.
ஊத்தங்கரையிலிருந்து மீண்டும் நேற்று இரவு 8 மணிக்கு பேருந்து வந்த போது, மேட்டுக்கடை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 10ற்கும் மேற்பட்டோர், நடத்துனரை சுற்றிக்கொண்டு நின்றுள்ளனர். புலியூர் பேருந்து நிறுத்தம் வந்த போது, நடத்துனரை சரமாறியாக தாக்கியுள்ளனர். கூட்டத்தில் இருந்த ஒருவன் கையில் போட்டிருக்கும் இரும்பு காப்பால் நடத்துனரின் கண் பகுதியில் பலமாக தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். பின்னர் அவரை பேருந்தினுள் இருந்து இழுத்து கீழே தள்ளி, பேருந்து நிறுத்தத்தில் காத்திக்கொண்டிருந்த 30ற்கும் மேற்பட்ட கும்பல் மீண்டும் சரமாறியாக தாக்கி, அவர் கையில் இருந்த பணப்பையை பிடுங்கி சென்றுள்ளது. பணப்பையில் அன்றய வசூல் பணம் ரூ.24,000 இருந்த நிலையில் ரூ.21,000த்தை கும்பல் எடுத்துக்கொண்டு பையை பேருந்து அடியில் வீசிச்சென்றுள்ளது. அதே நேரத்தில் ஓட்டுனர் அருகே இருந்த மூன்று ஆண்கள் மற்றும் இரு பெண்கள் ஓட்டுனர் கிருஷ்ணனை சரமாறியாக தாக்கியுள்ளனர். பெண்கள் இருவரும் கண்ணத்தில் அறைந்துக்கொண்டிருந்த போது, மற்ற மூவரும் காலால் ஓட்டுனரின் அந்தரங்க பகுதியில் மிக பலமாக தாக்கியுள்ளனர். இதற்குள்ளாக விபரம் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த பாரூர் போலீசாரை கண்டதும் பிரதாப் கூட்டி வந்த கும்பல் ஓடி மறைந்துக்கொண்டது. பின்னர் படுகாயமடைந்திருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்தில் இருந்த பயணிகளை மாற்றுப்பேருந்தில் அனுப்பி வைத்த, பாரூர் காவல் துறையினர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். பிரதாப் தலைமையில் 30ற்கும் மேற்பட்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். புலியூர் பேருந்து நிறுத்தத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் 30பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.