கம்பம்: ஆக.29.
தேனி தெற்கு மாவட்டம் உத்தமபாளையம் கிழக்கு ஒன்றியம் இராயப்பன்பட்டி கிராமத்தில் முருகன் என்ற விவசாயி அதிகாலையில் விவசாய பணியின் போது காட்டு மாடு எதிர்பாராத விதமாக தாக்கியதில் பலியானார். இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.முருகன் உடலை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா.இராமகிருஷ்ணன் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு முதற்கட்டமாக ஈமச்சடங்கிற்கு 50000 வழங்கினார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.