பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 63 பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் 10,000 மாணவ-மாணவிகளுக்கு சொந்த செலவில் பேனா வழங்கிய வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ:-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்ளிட்ட 63 பள்ளிகளைச் சேர்ந்த 10,000-த்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இம்மாணவர்களுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தனது சொந்த செலவில் ரூபாய் 80 ரூபாய் மதிப்பு கொண்ட பேனாக்களை வாங்கி, ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று வழங்கி வருகிறார். அந்த வகையில் கிளியனூர் , வேழமுறித்தான்பேட்டை, பள்ளிக்கு சென்ற எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேரில் சந்தித்து, ஒவ்வொருவருக்கும் பேனாக்களை வழங்கி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் அடுத்த மாதம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், எம்எல்ஏவின் இந்த செயல் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், ஏ ஆர் ராஜா ,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.