தென்காசி மார்ச் 23
இடிந்து விழும் அபாயகரமான அங்கன்வாடி கட்டிடத்தை கட்ட ஐந்து ஆண்டுகள் கோரிக்கை வைத்தும் எம்எல்ஏ எம்பி மக்களின் நியாயமான கோரிக்கையை கூட நிறைவேற்ற முன்வராத நேரத்தில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஒரே வாரத்தில் நன்கொடையாளர்கள் மூலம் அங்கன்வாடி கட்டிடத்தை புதுப்பித்தது குறித்து பொதுமக்களும் குறிப்பாக பெற்றோர்களும் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர் நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தென்புற வீதியில் அமைந்திருப்பது அங்கன்வாடி மையம் இந்த அங்கன்வாடி மையத்தில் மண்பாண்ட குயவர் குடியிருப்பு முப்புடாதி அம்மன் கோவில் தெரு, டாக்டர் அம்பேத்கர் தெரு வடக்கு அய்யாபுரம்தெரு, நடு அய்யாபுரம் தெரு வரையிலான தெருக்களின் வசித்து வரும் ஏழை எளிய குடும்பத்தில் உள்ள குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் வந்து கல்வி கற்று செல்வதோடு ஒழுக்க வழக்கங்களை கற்றுக் கொண்டு வருகின்றனர். அப்படி அனுதினமும் குழந்தைகள் வந்து கல்வி கற்றுச் செல்லும் இந்த அங்கன்வாடி மையத்தில் சுற்றுப்புற சுவர்கள் எல்லாம் பழுதடைந்து எப்போது உயிர்ப்பலி வாங்குவோம் என காத்திருக்கிற சூழலில் பல்வேறு அமைப்பினர் மற்றும் அப்பகுதி பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் நகராட்சி தலைவர் முதல் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கிருஷ்ண முரளி மற்றும் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆகியோரிடம் முறையாக கோரிக்கை வைத்து மனு அளிக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த அங்கன்வாடியை புதுப்பிக்க சமூக நலத்துறையோ? நகராட்சி நிர்வாகமோ? சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆன எம்எல்ஏ ? எம்பி ? கூட முன்வராத நிலையில் ரொம்பவே சோர்ந்துவிட்ட பெற்றோர்கள் ஒரு வழியாக செய்தித்தாள்கள் மூலம் இந்தச் செய்தியை இந்த அவல நிலையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சியில் ஈடுபட்டனர் அந்த வகையில் பத்திரிகைகளும் ஊடகங்களும் முறையாக அந்த கடமையை செய்திடவே அதற்கும் தென்காசி மாவட்ட நிர்வாகம் என்னவென்று கூட திரும்பி பார்க்கவில்லை இந்த நிலையில் தான் மக்கள் பிரதிநிதிகளை இனி நம்பி பிரயோஜனம் இல்லை என பெற்றோர்கள் நாமே முன்வந்து ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு ரூபாய் என நிர்ணயம் செய்து கட்டிடத்தை புதுப்பிப்போம் என முடிவு எடுத்தனர் அதற்கும் அனுமதி பெற நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை இந்த நிலையில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் ஆடிவேல் என்பவர் இது குறித்து செவிமடுக்கவே சம்பந்தப்பட்ட கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் சிலரை அழைத்து சிறு குழந்தைகளின் கல்வி விவகாரம் எனவே அந்த கட்டிடத்தை நம் குழந்தைகள் நலன் கருதி நாமே புது குத்து கட்டிட முன்வர வேண்டும் என கூறியதோடு முதல் கட்டமாக ஆய்வாளர் ஆடி வேல் ஒரு பங்கு தொகையை நன்கொடையாகவும் பின் நன் கொடையாளர்களில் ஒருவர் சிமெண்ட் ஒருவர் செங்கல் ஒருவர் தண்ணீர் ஒருவர் கொத்தனார் சம்பளம் கொடுப்பதற்கு ஒருவர் என நிர்ணயம் செய்து கட்டிடத்தை கட்டி முடித்து அழுக்கடைந்து கருவாடு துர்நாற்றத்தில் மூக்கை பிடித்துக் கொண்டு அங்கன்வாடிக்குள் இருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கொண்டிருந்த குழந்தைகளுக்கு புத்துணர்வு ஊட்டும் வகையாக அந்த கட்டிடத்தையே வர்ணஜாலங்களால் ஜொலிக்க வைத்து விட்டார் ஆய்வாளர் ஆடிவேல் சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் குழந்தைகள் கோடை நேரங்களில் எந்த தருணத்திலும் கோடை வெயிலின் தாக்கம் தாக்காத அளவிற்கு மின்விசிறிகள் விளையாட்டு கல்வி உபகரணங்கள் என பல்வேறு கட்டமைப்புகளையும் செய்து முடித்தார் மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசாதளவிற்கு கருவாட்டுக்கடையை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வியாபாரிகளை கேட்டுக்கொண்டார். காவல் ஆய்வாளர் ஆடிவேலின் இந்த மனிதாபிமான செயலை குழந்தைகளின் பெற்றோர்கள் மட்டுமி ன்றி கடையநல்லூர் ஊர்பொதுமக்கள் வெகுவாக பாராட்டி அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.