கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 1985 – 1986 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அன்றய அரசு, வீட்டு இடம் ஒதுக்கியது, சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வந்தனர், 2007-2008 ஆம் ஆண்டு வீடு கட்டி வசித்து வரும் சுமார் 40 வீடுகளுக்கு மட்டும் அன்றய அரசு, சில பந்தனைகளுடன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது,
தற்போது பட்டா வழங்கி 18 ஆண்டுகள் ஆகியும் இந்த பட்டாவை கிராம கணக்கில் ஏற்ற வில்லை, தொடர்ந்து 5 ஆண்டுகளாக கிராம கணக்கில் ஏற்ற வேண்டி மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் முகாம், வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் பல முறை மனு அளித்தும் கண்டுக் கொள்ளவில்லை, இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டால் இந்த நிலம் பி.ஒ.பி லேண்டு என்று ஆங்கிலத்தில் கூறுகின்றனர்.
2000 -ம் ஆண்டு அரசு தேவைக்காக ஒதிக்கிய
இந்த நிலத்தை கிராம கணக்கில் ஏற்ற முடியாது என்கிறார்.
ஆனால் 2007 – 2008 ஆம் ஆண்டுதான் பட்டா வழங்கப்பட்டது, தடை ஆணையை நீக்கி தானே பட்டா வழங்கி இருப்பார்கள் என கேட்டதற்கு, அது எப்படி குடுத்தார்கள் என்று எனக்கு தெரியாது என்று அலட்சியமான பதிலாக உள்ளது,
பி.ஒ.பி லேண்டாக வீடுகளே இல்லாமல் வெரும் நிலமாக அரசு பதிவேட்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் வசிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை அரசு அலுவலர்கள் எப்படி வழங்கினார்கள், அரசு பதிவேட்டில் இல்லாத இந்த எம்.ஜி.ஆர் நகருக்கு அடிப்படை வசதிகள் தெரு விளக்கு, தண்ணீர், சாலை அமைக்க எப்படி பேரூராட்சியில் நிதி ஒதுக்கினார்கள், வீட்டு வரி, தண்ணி வரிக்கு எப்படி அடங்கல் கொடுத்தனர், கையூட்டல் வாங்குவதற்காகவே கிராம கணக்கில் ஏற்றாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
தற்போதைய அரசு மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் மனுவே இல்லாமல் கூட்டத்தில் குறையை மட்டும் சொன்னால் போதும் கணினியில் பதிவு செய்துக்கொண்டு 30 நாட்களில் குறை தீர்க்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நல்ல திட்டங்களை கொண்டுவந்தார் ஆனால் இந்த ஆட்சிக்கு அவ பெயர் உருவாக்கும் வகையில் அரசு அலுவலர்கள் வாங்கு மனுவிற்கு பதில் கூட குடுக்க வில்லை என புலம்புகின்றனர்.
மக்களுக்காக தான் அரசு என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தனி கவணம் செலுத்தி எம்.ஜி.ஆர் நகர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.