தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாலசுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஊழியர் விரோத, எதேச்சதிகார நடவடிக்கைகளை கண்டித்து மாநிலத்தின் அனைத்து வருவாய் துறை அலுவலகம் முன்பாக கண்டனப்பதாகைகள் வைப்பது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வுக் கூட்டங்களில் அனைத்து நிலை அலுவலர்களை தரக்குறைவாக பேசுவதை ஒருமையில் வசைப்பாடுவதையும் பின் அலுவலர்களை கண்ணியக் குறைவாக குறிப்பிடுவதையும் முற்றிலும் கைவிட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பாரபட்சமான பழிவாங்க நடவடிக்கைகளை உடனே ரத்து செய்து தர வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் அச்சுறுத்தல் இன்றி சுமூகமாக மக்கள் பணி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அசோக்குமார், ராஜீவ் காந்தி மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics