தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி புதிய கல்வி ஆண்டிற்காக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாநகராட்சி பள்ளியான சிவந்தாகுளம் பள்ளியின் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை மேயர் வழங்கினார் , மேலும் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையானது உயர்ந்து வருகின்றது. அதனை கருத்தில் கொண்டு நடைபெற்று முடிந்த புதிய பள்ளி வகுப்பறை கட்டிடங்களையும் செப்பனிடப்பட்டு வரும் பழைய பள்ளி கட்டிடப் பணிகளையும் அந்தப் பள்ளியில் நடைபெற்று வரும் புதிய மாணவர் சேர்க்கையினையும் பதிவேட்டினை பார்வையிட்டார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உடன் பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, தலைமை ஆசிரியர் எமல்டா வெலன்சியா, மாமன்ற உறுப்பினர்கள் பாப்பாத்தி அம்மாள் , முத்துமாரி , வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பாலன் , முன்னாள் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் வட்ட கழக செயலாளருமான இசக்கிமுத்து , முன்னாள் மாநகர விவசாய அணி அமைப்பாளர் ஆவுடையப்பன், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ ,மாணவிகள் செல்வங்கள் கலந்து கொண்டனர்
குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை மேயர் வழங்கினார்
Leave a comment