கொல்லங்கோடு, டிச 20
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முஞ்சிறை, கொல்லங்கோடு வட்டார கிளைகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று 19-ம் தேதி காலை நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் மிகுந்து விட்டதாகவும், நகராட்சி பகுதிகளில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் தினமும் செம்மண் கடத்துவதாகவும், அனைத்து பகுதிகளிலும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்துக்கு முஞ்சிறை வட்டார செயலாளர் அலெக்சீஸ் தலைமை வகித்தார். கொல்லங்கோடு வட்டார செயலாளர் அஜித்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜயமோகன், கண்ணன் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.