கிருஷ்ணகிரி:மே -18
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதாமான செயல்களலான, மது விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம், குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்படுபவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி தாலூகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட KA நகர் தர்கா பின்புறம் வெங்கடாபுரம் கிராமத்தில் சிவராமன் என்பவரது வீட்டில் சக்திகுமார் (28) s/o சிவா, மேல்வீதி மகாராஜகடை கிராமம், கிருஷ்ணகிரி என்பவர் வெளிமாநிலங்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . தமிழரசி அவர்கள் தலைமையில் மேற்கண்ட வீட்டில் சோதனை மேற்கொண்டதில் மேற்கண்ட சக்திகுமார் என்பவர் வெளிமாநில பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உண்மை என விசாரணையில் தெரிய வந்தது. இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சக்திகுமார் (28) s/o சிவா, மேல்வீதி மகாராஜகடை கிராமம், கிருஷ்ணகிரி 2) ரேவதி (33) w/o சதீஸ்குமார். பாலாஜி நகர், எலக்ட்ரானிக்சிட்டி, பெங்களுர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும் தலைமறைவு எதிரிகளான 1. விஜயகாந்த் (26) s/o குமரேசன் மற்றும் 2. சிவராமன் (40) s/o மாதேஸ் என்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது வாட்ஸாப்ப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.