திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பட்டியலின மாணவனை சாதி ரீதியாக கேவலப்படுத்தி பேசியதோடு,புத்தகத்தில் எழுதியும் அடித்தவர் மீது வன்கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
திருப்பத்தூர்:நவ:27, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட குனிச்சி மோட்டூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் விஜயகுமார் என்பவர் ஏழாம் வகுப்பு படிக்கும் பட்டியலின மாணவனை சாதி ரீதியாக கேவலப்படுத்தி பேசியதோடு, புத்தகத்தில் சம்பந்தப்பட்ட பட்டியலின சாதியை எழுதி அடித்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வன்கொடுமை என் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளியின் முன்பு முற்றுகை செய்தனர்.
குளிச்சி மோட்டூர் பகுதியினை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இளைய மகன் சுதீப் (வயது 12) அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இசையை பற்றிய பாடத்தை வகுப்பறையில் விஜயகுமார் ஆசிரியர் நடத்திக் கொண்டிருக்கும்போது, இசையைப் பற்றியும் இசைக்கருவிகளை பற்றியும் எடுத்துக் கூறியுள்ளார். இந்த இசை கருவிகளை வாசிப்பவர்கள் மிகவும் கேவலமானவர்கள் என்றும் பட்டியல் என ஆதிதிராவிடர் சமுதாய பெயரை புத்தகத்தில் எழுதியும் அடித்தும் கேவலப்படுத்தி உள்ளார். சம்பந்தப்பட்ட பட்டியலினத்தவர்தான் இதுபோன்று இசைக்கருவிகளை வாசிப்பார்கள் என பாடம் நடத்திக் கொண்டு கேள்வி கேட்டு மாணவன் சுதிப் என்பவரை அடித்துள்ளார். வகுப்பறையில் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர். ஆனாலும் சம்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் போனதற்கு பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலரிடம் சென்று மனுவாக எழுதி புகார் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மணியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஊடகங்களை அணுகி உள்ளனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா.சுபாஸ் சந்திர போஸ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் எ.ஜெ.சக்தி, துணைச் செயலாளர் மணி, ஒன்றிய பொருளாளர் சங்கர், திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் திருமா விமல், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் கோகுல் , மாவட்ட ஓவியர் அணி அமைப்பாளர் பாலா, ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்,ஒன்றிய அமைப்பாளர் இரா.விக்னேஷ், நகர இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை செயலாளர் விக்கி,சுரேஷ், அன்பரசு மற்றும் பலரும் இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளியின் முன்பு குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.