நாகர்கோவில் – நவ- 19,
கன்னியாகுமரி மாவட்டம் சரல் விளைவை சேர்ந்தவர் உஷா தேவி (39 ) இவரது கணவர் கிறிஸ்டோபர் ஜோபி இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். அண்மையில் சில நபர்களால் எரிந்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கணவன் மனைவி இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர் விவாகரத்து ஆன நிலையில் உஷா தேவி என்பவர் அவரது இரண்டு குழந்தைகளையும் வேலைக்கு சென்று வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது கணவர் கிறிஸ்டோபர் ஜோபி கடந்த ஆறாம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இவரது உடல் கடந்த ஏழாம் தேதி அடக்கம் செய்யப்பட்டது . தனது கணவர் இறந்த பின்பு கணவர் வீட்டில் உஷா தேவியும் அவரது இரண்டு குழந்தைகளும் இருந்து வந்தனர். இவர்களோடு இவரின் கணவரின் தாயாரும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்