தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழையினால் மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் பகுதியில் உள்ள கடைகளின் உள்ளே வெள்ளம் சென்றதால் வியாபாரிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர் பாதிப்பு அடைந்த பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் மழையினால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும், தென்காசி மலையான் தெரு சமுதாய நலக்கூடத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.