நாகர்கோவில் – மே – 28,
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த மேலக்காட்டு விளை பகுதியைச் சேர்ந்த தவசிமுத்து (48) , இவரது மனைவி திருவேணி (45) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது மகன் தனிஷ் (11) உடன் மேலக்காட்டு விளையில் வேறு திருமணம் செய்யாமல் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2013 – ஆம் ஆண்டு தவசி முத்துவின் மனைவியின் தோழியான அதே பகுதியை சேர்ந்த ராதா என்பவருக்கு குடும்ப அத்தியாவசிய தேவைக்காக பணம் தேவைப்பட்டதால் தவசி முத்துவின் வீட்டின் அருகே தவசி முத்துவின் பெயரில் உள்ள 60 சென்ட் நிலத்தில் 30 சென்ட் நிலத்தின் பத்திரத்தை நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த செலட் ரோஸ் என்பவரின் கட்டாயத்தின் பேரில் விலை பத்திரமாக எழுதி கொடுத்து 5 லட்ச ரூபாய் ராதாவிற்கு பெற்றுக் கொடுத்ததாகவும், அதற்கு உண்டான வட்டித்தொகை மாதா மாதம் ரூபாய் 25000 செலட் ரோஸ்க்கு ராதா தவறாமல் அழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 2014- ஆண்டு செலட் ரோஸிடம் , ராதா அசல் தொகை ரூபாய் ஐந்து லட்சத்தினை கொடுத்து சொத்து பத்திரத்தினை மீட்ப்பதற்க்காக சென்ற போது செலட்மேரி தனக்கு பத்து லட்சம் தந்தால் தான் சொத்து பத்திரத்தை தருவேன் என கூறியதால். சம்பவம் குறித்து திருவேணியிடம் ராதா கூறியுள்ளார். எனவே தவசிமுத்து நாகர்கோயில் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த சொத்து சம்மந்தமான வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாலும் செலட் மேரி தவசி முத்துவின் சொத்தினை தொடர்ந்து அபகரிக்கும் நோக்கில் வெவ்வேறு நபர்களுக்கு பத்திரத்தினை மாற்றி உள்ளதாகவும் , இந்த சொத்து பிரச்சணை காரணமாக தனது மனைவி மனதளவில் பாதிப்படைந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார், அவரின் உடலைைை அடக்கம் செய்த கல்லறையும் அதே நிலத்தில் தான் உள்ளது. இந்நிலையில் மேலக்காட்டு விளை பகுதியை சேர்ந்த சிலர் நேற்று காலை எனது இடத்திற்கு வந்து எனக்கு சொந்தமான இடத்தைை விலைக்கு வாங்கியிருப்பதாகவும் இடத்தினை அளவீடு செய்து கல் நாட்ட வேண்டும் என கூறி என்னுடைய இடத்தில் அத்துமீறி நுழைந்தனர். நான் அவர்களிடம் சொத்து குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனக்கூறி இந்த நிலத்திற்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக வைத்திருந்த அறிவிப்பு பலகையை காண்பித்தேன். உடனே அறிவிப்பு பலகையா எனக்கூறி அறிவிப்பு பலகையை அடித்து உடைத்து கிழித்து எறிந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, என்னை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் நான் அவசர உதவி என் 100க்கு தொர்புகொண்டு உதவி கேட்டேன், உடனே அவர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக போலீசார் வருவதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவர்கள் சென்றுவிட்டனர். ஆனாலும் சம்பவ இடத்திற்கு போலீசார் வரவில்லை. நான் அழைத்ததற்கு போலீஸ் வரவில்லை என்பதை அறிந்த அவர்கள் மறுபடியும் மாலையில் எனது இடத்தில் அத்துமீறி நுழைந்தனர் உடனடியாக நான் அவர்களை தடுத்து நிறுத்தினேன். எனவே அவர்கள் என்னை கொலை செய்யும் நோக்கில் தாக்கியதால் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. நான் உயிருக்கு பயந்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்க்கு பல முறை தொலைபேசியில் தகவல் கூறிய பின்பும், அவர்கள் அரசியல் வாதிகள் என்பதால் சம்பவ இடத்திற்க்கு காவல் துறையினர் வரவில்லை , நான் எனது 11 வயது மகனின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், என்னுடைய உயிர்க்கு பயந்தும் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் வந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் என்னை தாக்கியவர்களால் தனக்கும் தனது மகனின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் எனவே காவல்துறையினர் கூட்டு சதி செய்து என்னுடைய சொத்தினை அபகரிக்கும் நோக்கில் தன் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் மருத்துவமனையில் காயங்களுடன் நான் அனுமதிக்கப்பட்டும் இதுவரையிலும் போலீசார் என்னை வந்து விசாரிக்கவில்லை எனது சொத்தை அபகரிக்கும் நோக்கில் உள்ள அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எனது விஷயத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்டு என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது நிலத்திற்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.