கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் மற்றும் முட்டம் கே.எம்.எம்.சி மருத்துவ கல்லூரி இணைந்து புதிய மருத்துவமனை திறப்பு விழா கன்னியாகுமரியில் நடைபெற்றது.
மருத்துவ கல்லூரி டீன் டாக்டர்.என்.மோகன் மருத்துவமனையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பங்கு தந்தை உபால்ட், பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், டி.எஸ்.பி மகேஷ் குமார், மருத்துவ கல்லூரி துணைப்பொது மேலாளர் டாக்டர்.அழகேசன், பேராசிரியர் சுரேந்திரா உட்பட பலர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் பங்கு பேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், உறுப்பினர்கள் மெக்ஸி, ராஜா உட்பட ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.