திருப்பத்தூர்:அக்:15, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை அடுத்த மேட்டுக் கணியூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மற்றும் இருளர் மக்களுக்கு சுடுகாடு இடம் ஒதுக்கி தர மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்.
மேட்டுக் கணியூர் கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். ஏற்கனவே சம்பந்தப்பட்ட மக்கள் இடத்தினை தேர்வு செய்து அந்த இடத்தில் இறந்தவர்களை புதைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் சிலர் அதே இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கின்றனர் என்று கூறுகின்றனர். மேலும் இந்த சுடுகாட்டில் சுற்றுவட்டார மக்கள் இறந்தவர்களை கொண்டு வந்து புதைப்பது வழக்கம் தற்போது அதே சுடுகாட்டினை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். காலம் காலமாக மேட்டுக் கணியூர் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம் இந்த இடத்தினை மற்றவர்களுக்கு இடம் அளிக்காமல் எங்களுக்கு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனுவினை வழங்கியபோது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு முறையான விசாரி அடிப்படையில் சரி செய்து தருவதாக கூறினார். மேட்டுக் கணியூர் கிராம மக்கள் சார்பாக வழங்கப்பட்ட மனுவின் போது அப்பகுதிரைச் சேர்ந்த ஜெயராமன், சுப்பிரமணி, பெரியாண்டி, சிவலிங்கம், வெங்கடாசலம், பெருமாள், கோவிந்தன், பழனி என இருவருக்கும் மேற்பட்டோர் மனுவினை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.