கிருஷ்ணகிரி,டிச.1- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ அதர்வன பத்ரகாளி என்று அழைக்கப்படும் ஶ்ரீ மங்கள மஹா பாதாள பிரத்தியங்கிரா காளி திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா மூன்று நாள்கள் வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது,
மஹா கும்பாபிஷேக விழாவினையொட்டி தமிழகத்தின் பல்வேறு புன்னிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புணித நீர் கலசங்களுக்கு அடங்கி கலசங்களை வைத்து சிறப்பு ஆறுகால யாக பூஜைகள் துவங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நாளான சிவாச்சாரியர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பூரணகும்ப கலசங்களின் கடம்புறப்பாடு நடைப்பெற்றது,
பின்னர் திருக்கோவிலில் கோபுர கலசம் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், இராஜ கோபுரமாக கருவறை அமைக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் காட்சியளிக்கும் ஶ்ரீ மங்கள மஹா பாதாள பிரத்தியங்கிரா காளிக்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் ஊற்றி மஹா பிரதிஷ்டையுடன் குப்பாபிஷேகம் வேத மந்திரங்களுடன் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷேகம் நடத்தப்பட்டது,
இதையடுத்து கற்பூர தீபாதரனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டு, தீர்தப்பிரசாதமும் வழங்கப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் ஶ்ரீமங்கள மஹா பாதள பிரத்தியங்கிரா காளி, ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி மற்றும் வினாயகப் பெருமானை 1000-ற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்ப ட்டனர். இதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது,
தொடர்ந்து 48 நாள் திருக்கோவில் மண்டல பூஜையும் நடைப்பெற உள்ளதாக
ஸ்ரீ மங்கள மஹா பாதாள பிரத்தியங்கிரா காளி உபாசகர் ஜெகதாப் சத்தி ஶ்ரீ பிரகாஷ் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சக்தி ஸ்ரீ பிரகாஷ் சுவாமிகள் விழா குழுவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.