திருமங்கலம் அக்டோபர் 06
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள இராஜதானி
ஊராண்ட உரப்பனூர் கிராமத்தில்
8 நாடு 24 உப கிராமங்கள் 64 பர கிராமங்கள் 128 துணை கிராமங்களை தன்னாட்சி செய்த பிரமலைக்கள்ளர் நாட்டின் தலைவர் இராஜதானி ஊராண்ட உரப்பனூர் வடமலை சுந்த தேவர் வாரிசுக்கு 13-வது பெரிய தேவதனம் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது.
அந்த வகையில்
உரப்பனூரில் மன்னர் திருமலை நாயக்கரின் காலத்தில் இருந்து தலைமுறை தலைமுறையாக கொண்டாடிவரும் எட்டுநாடு 24 உப கிராமங்களின் தலைவருக்கு பெரிய தேவதனம் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. மதுரை பாண்டிய நாட்டின் தன்னரசு கள்ளர்கள் நாடுகளின் பிரமலைக்கள்ளர்கள் இராஜதானி ஊராண்ட உரப்பனூரை தலைமையிடமாக கொண்டு வடக்கே நாகமலைக்கும்,
தெற்கே நடுவககோட்டை கிழக்கே மதுரை மொட்ட கோபுரம் வாசலுக்கும், மேற்கே தொட்டப்ப நாயக்கனூர் வாடிவாசலுக்கும் உள்ளடக்கிய எட்டு நாடுகள் 24 உப கிராமங்கள்
64 பரகிராமங்கள் 128 துணை கிராமங்கள் தன்னாட்சி செய்த போர்க்குடி காவல் தலைவர்களில் ஒருவரான பட்டவன் வடமலை சுந்தத்தேவர் ஏழு ஊரை சேர்ந்த இவரின் வாரிசுகள் ஐந்து மக்கள் நான்கு பங்காளிகள் ( பெத்தணன் சுந்தத்தேவர், குப்பணன் சுந்தத்தேவர் , சுந்தப்பிள்ளை சுந்தத்தேவர் , கோழிவைரன் சுந்தத்தேவர் மற்றும் ஆண்டிச்சாமி சுந்தத்தேவர் (இவர் துறவியாக இருந்து ஜீவசமாதி அடைந்தவர்)இவர்களில் மற்ற நான்கு பங்காளிகள் சுழற்சி முறையில் 12 தலைமுறைகளாக 8 நாடுகளில் தலைவராகி தேவர் பட்டம் சூட்டப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முருகன் சுந்த தேவர் வயது (80) அவருக்கு பதினாறு வருடங்களுக்குப் பிறகு மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெரு ஆயிரம் வீட்டு யாதவர் உறவின் முறைக்குச் சொந்தமான இராம ஸ்வாமி நவநீத கிருஷ்ணசாமி தேவஸ்தான ரிசிவர் திரு N. மாடசாமி , ஜாதி பெரிய தேவதானம் பட்டக்காரர் திருமலை பின்னத்தேவர் ( மூக்குமாறி தவமணி கல்யாணி த்தேவர் தர்மத்துபட்டி ) நான்கு பங்காளிகள், நாயக்க மார்கள் எட்டு நாட்டு தேவர்கள் மற்றும் சுற்று வட்டார கிராம பொது மக்கள் ஒன்று கூடி தேவர் பட்டம் சூட்டி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக விழாவில் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படாத வகையில் திருமங்கலம் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்.