திருமங்கலம் அருகே பாதாள சாக்கடை மூடாமல் கழிவுநீர் வெளியேறுவதால் நோய் பரவும் அபாயம் அச்சத்தில் பொது மக்கள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சபட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பாதாள சாக்கடைகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால் அதில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் பரவுவதுடன், பல இடங்களில் தோண்டிய பள்ளங்களில் இருந்து வெளியேறி வரும் கழிவு நீர், அப்பகுதியை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் பரவுவதால் கொசுக்கள் பரவி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்பள்ளங்களில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் வாகன ஓட்டிகள் அவ்வழியே கடந்து செல்லும் போது விபத்துகள் நிகழும் அபாய நிலையில் உள்ளதால் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.