தென்காசி ஏப்.1
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேநீரில் துவங்கி உணவு உண்ணும் அனைத்து பதார்த்தங்கள் மட்டுமின்றி ஆரோக்கியத்திற்காக வாங்கி உண்ணும் பழங்கள் வரை ரசாயனமும் கலப்படமும் கொடி கட்டி பறக்கிறது.
என்னதான் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் இருந்தாலும் திருட நினைக்கிறவன் மிகவும் அதி புத்திசாலியாக விளங்குகிறான் அந்த வகையில் கடைநல்லூர் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகள் சாலையோர கடைகள் ஹோட்டல்கள் மால்கள் தள்ளுவண்டி கடைகள் உணவு விடுதிகள் என ஏகமாய் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் சென்னையை மிஞ்சிடும் அளவுக்கு பரபரப்பாய் காலையில் வேலைக்கு செல்வதற்காக பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக பெற்றோர்களும் அதிகாரிகளும் அது போல் வியாபாரிகளும் பல்வேறு வகையில் அனைவரும் காலை சிற்றுண்டியை வாங்கி உண்ணுகின்றனர் அப்படி ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் பதார்த்தங்கள் யாவும் சுத்தம்இல்லாமல் அடுப்படிக்கு அருகே பெருச்சாளி சுத்தி வந்து உணவு பொருளை ஆசீர்வாதம் பண்ணுவது போல் சில ஓட்டல்களிலும் பல ஓட்டல்களில் தாம் தயாரித்த உணவுப் பொருளில் என்ன கிடக்கிறது என்று கூட பார்க்காமல் அவசர கோலத்தில் தயார் செய்யும் ஹோட்டல் உரிமையாளர்கள் அப்படியே சுடச்சுட இருக்கிறது சாப்பிடுங்கள் என பொதுமக்களை வற்புறுத்தி சாப்பிட வைப்பது என காலை வர்த்தகங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதே போல் தேநீர் காபி இது போன்று வியாபாரத்தில் ஈடுபட்டு வியாபாரிகள் பெரும்பாலான கடைகளில் தேயலையோடு அண்டித்தோடு எனப்படும்முந்திரி பருப்பின் மேல் தோலை தூளாக்கி அதை தேயிலையோடு சேர்த்து கலருக்காக கலப்படம் செய்து வருகின்றனர் அதேபோல் நெய்க்கு பதில் மதிய உணவில் டால்டாவை வழங்குகின்றனர் அதுவும் போக இதுதான் நஞ்சு என்றால் பரிமாறுவதற்காக விரிக்கப்படும் பேப்பர்கள் அனைத்தும் பிளாஸ்டிக் காக இருப்பதால் அதுவும் ஒரு வகையான நோயை பரப்பிக் கொண்டிருக்கின்றது இலை என்ற பேச்சுக்கே பெரும்பாலான ஓட்டல்களில் இடம் இல்லை என்றே சொல்லலாம் இதே போல் ஹோட்டல்கள் டீக்கடைகளில் தான் இப்படி என்றால் குளிர்பான கடைகளை சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு பழங்களை பழுக்க வைத்து வெகு விரைவாக விற்பனை செய்ய வியாபாரிகள் கார்பைடு என்னும் ரசாயன கல்களை பயன்படுத்துகிறார்கள் அதேபோல் ரசாயன ஊசி மருந்துகளையும் பயன்படுத்தி உடன் பழுக்க வைக்கிறார்கள் கலருக்காக பல்வேறு வகையான புத்திசாலித்தனமான மோசடிகளில் பல வியாபாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் எந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த பழரசங்களை அருந்த பொதுமக்கள் செல்கிறார்களோ அங்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணராமல் தங்களது தாழ்மையுடன் இப்போது சேர்ந்தால் சரி என்ற அளவில் முண்டியடித்து ரசாயன கலவையுடன் கூடிய பழரசங்களை பருகி வருகின்றனர் இது ஒரு புறம் இருக்க மதியம் தள்ளு வண்டிகளில் விற்கப்படும் பெரும்பாலான பிரியாணிகள் மிகவும் தரம் அற்றவையாய் பிரியாணியில் இருப்பது உண்மையிலேயே ஆட்டு இறைச்சியா மாட்டு இறைச்சியா அல்லது கோழி இறைச்சியா என்பதை கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக தொழில்நுட்பத்தோடு பிரியாணியை தயார் செய்து வருகின்றனர் மேலும் அப்படி தள்ளுவண்டிகள் நிறுத்தப்படும் இடங்களும் அதை சுற்றியுள்ள இடங்களும் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சிறுநீர் கழிக்கும் இடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மாலை நேரங்களில் சிற்றுண்டிகளை தயார் செய்யும் ஹோட்டல்களில் பலர் என்ணை முதல் மாவு மற்றும் இதர கலவைக்குண்டான மூலப்பொருட்கள் அனைத்திலும் கலப்படத்தையே கையாண்டு வருகின்றனர். இதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சற்றும் தனது கடமையை செய்ய முன்வருவதில்லை மாறாக மக்கள் தான் நித்தமும் இந்த கலப்பட உணவால் அவதியுற்று வருகின்றனர் கடையநல்லூர் பொதுமக்களை காப்பதற்கு இந்த அரசின் கீழ் செயல்படும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் முன்வருவார்களா? என ஒட்டுமொத்த பொதுமக்களும் எதிர்நோக்கி உள்ளனர்
அனைத்திலும் கலப்படம் தூங்கும் உணவுத்துறை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics