நாகர்கோவில், மே- 21,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் நாகர்கோவிலில் பாறைக்காமடம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து உள்ளது – வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் முடக்கம் –
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதே போன்று நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பாறைக்கா மடம் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். நகரப் பகுதிகளில் உள்ள சாக்கடை ஓடைகள், கால்வாய்களில் சீரமைப்பு பணிகள் செய்யாததே இது போன்ற பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் பாம்பு, பூச்சிகள் வீட்டுக்குள் நுழைந்து விட்டன எனவே தொற்று வியாதிகளும் இனி பரவும் நிலை ஏற்படும் என இப்பகுதி பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.