தஞ்சை ஏப்ரல் 19
தஞ்சாவூர்
மீனாட்சி மருத்துவமனையில்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முதல் சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சை
டயாலிசிஸ் சிகிச்சையை சார்ந்திருந்த இந்நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து தானமாகப் பெற்ற சிறுநீரகம் பொருத்தப்பட்டதால் காப்பாற்றப்பட்டார்.
இந்நோயாளியும் மற்றும் அவரது மனைவியும் சிறுநீரக உறுப்புமாற்று சிகிச்சைக்கு மரபியல் இணக்க நிலையைக் கொண்டிருந்ததால், உறுப்பு நிராகரிப்பிற்கான இடர்வாய்ப்பு கணிசமாக குறைந்திருந்தது. இத்தகைய பொருத்தமான மரபியல் இணக்கநிலை மிக அரிதாகும்.
மேலும்
டெல்டா பிராந்தியத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் மீனாட்சி மருத்துவமனை – தஞ்சாவூர், அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 ஆண்டுகள் வயதுள்ள ஒரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து தானமாகப் பெற்ற சிறுநீரகத்தைக் கொண்டு இச்சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், காவிரி டெல்டா பிராந்தியத்தில் NABH – ன் அங்கீகாரம் பெற்றிருக்கும் ஒரு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை இது என்ற பெருமையையும் இதன் மூலம் இம்மருத்துவமனை பெற்றிருக்கிறது.
மேலும்
ஒரு அரிதான மருத்துவ நிகழ்வாக மனைவியின் சிறுநீரகம் மரபியல் ரீதியில் அவரது கணவருக்கு பொருத்தமானதாக இருந்தது. இத்தகைய நிலையானது வழக்கமான நெருக்கமான இரத்த உறவினர்கள் மத்தியில் மட்டுமே காணப்படும். இந்த அசாதாரண பொருத்தத்தை கண்டறிந்த மருத்துவமனையின் நிபுணர்கள் குழு உயிருள்ள நபரிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. சிறுநீரகத்தை தானமாக வழங்கிய மனைவியும் மற்றும் பொருத்தப்பட்ட சிறுநீரக உறுப்பு நிராகரிப்பிற்கான அறிகுறிகள் எதுவுமில்லாமல் அதனைப் பெற்றிருக்கும் கணவரும் நன்றாக குணமடைந்து வருகின்றனர். மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் நிபுணர் டாக்டர். எஸ். கௌரி சங்கர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழுவில் சிறுநீர் பாதையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். R. ரவிச்சந்திரன், இதய மார்பறை மற்றும் இரத்தநாள அறுவைசிகிச்சை துறையின் மூத்த நிபுணர் டாக்டர். பி. சுரேஷ் பாபு, சிறுநீர் பாதையியல் துறையின் முதுநிலை மருத்துவர் டாக்டர். V. பிரவீன் மற்றும் மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். G. அரிமாணிக்கம் மற்றும் மயக்கவியல் துறையின் நிபுணர் டாக்டர். S. நாராயணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த இம்மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவமும், துல்லியமும் மற்றும் இம்மருத்துவமனையில் அமைந்துள்ள உயர்தொழில் நுட்ப வசதிகளும் இந்த அறுவைசிகிச்சையின் வெற்றியை உறுதி செய்து நோயாளிக்கு ஒரு புதிய வாழ்க்கையை தந்திருக்கிறது.
என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பீடு திட்டத்தின் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics